மட்டக்களப்பு- தாழங்குடா பகுதியிலுள்ள வீடொன்றின் கூரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாழங்குடா சமூர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான (45 வயது) 3 பிள்ளைகளின் தந்தையான விக்டர் சுஜித்குமார் என்பவரே சடலமாக இன்று (சனிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையினை தொடர்ந்து மனைவி பிள்ளைகளுடன் அவரது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இவ்வாறு அவர்கள் சென்றதன் பின்னர் தனிமையில் இருந்த குறித்த நபர் வீட்டிலேயே தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம், தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.














