நல்லூர் முருகப்பெருமான் மஞ்சள் பூமாலை அலங்காரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை எழுந்தருளினார்.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் 17ஆம் திருவிழாவான இன்றைய தினம், திருக்கார்த்திகை திருவிழாவாகும்.
கொரோனோ வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஆலயத்தினுள் பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படாத நிலையில், திருவிழாக்கள் அனைத்தும் உள்வீதியிலையே இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை, ஆலய திருவிழாக்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆலய நிர்வாகம் நேரடியாக ஒலிபரப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















