நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகின்றன.
அதற்கமைய, தரம் ஒன்று முதல் 5 வரையான ஆரம்பப் பிரிவுகளை இவ்வாறு ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான சுகாதார வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் பாடசாலை சீருடைகளை அணிவது கட்டாயமில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாகப் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.














