இந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைவடைந்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் கர்நாடகாவில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாடசாலைகளுக்கு வரும் குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
50 வீத குழந்தைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும், முதல் ஒரு வாரம் பாடசாலைகளை அரை நாள் மட்டுமே நடத்த வேண்டும் என அரசு கூறியுள்ளது.
இதேவேளை கொரோனா ஊரடங்கு காரணமாக கல்விநிறுவனங்கள் மூடப்பட்டு பின்னர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பாடசாலைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று முதல் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு தூய்மை பணிகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.