• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடு திரும்ப விரும்புகின்ற இலங்கையர்கள் பூர்வீக இடங்களில் கௌரவமாக வாழ வழியேற்படுத்தப்படும் – டக்ளஸ் உத்தரவாதம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/26
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
77 1
A A
0
37
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருதல் மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைள் தொடர்பில், சென்னையில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்து சென்று இந்தியாவில் தங்கியிருக்கின்றவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக பிரதி உயர்ஸ்தானிகரினால் கடற்றொழில் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து அழைத்து வரப்படவுள்ள இலங்கையர்களுக்கு பயண ஏற்பாடுகளை இலவசமாக வழங்குவதற்கும் பொருட்களை ஏற்றிவருவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த பிரதி உயர் ஸ்தானிகர், அழைத்து வரப்படுகின்றவர்களின் செலவுகளுக்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் முதல் கட்டமாக தலா 30,000 ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், அடுத்த வருடம் சுமார் 7000 குடும்பங்களை அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், அழைத்து வரப்படுகின்றவர்களின் பூர்வீகப் பிரதேசங்களில் சர்வதேச தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த முயற்சிகளை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டிற்கு வருவதற்கு விரும்புகின்ற இலங்கையர்கள், தங்களுடைய பூர்வீக இடங்களில் மீள்குடியேறி இயல்பு வாழ்கையை தொடர்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்ததுடன் குறித்த விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பூரணமான ஒத்துழைப்பத் தனக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவின் சிறப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கபட்டிருக்கின்றவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

கடந்த மாதம் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டபோது சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினரின் உறவினர்கள் தன்னை சந்தித்தமையை சுட்டிக்காட்டியதுடன், அதுதொடர்பாக ஏற்கனவே இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், சட்டவிரோத தொழில் முறையினால் ஏற்பட்டு வருகின்ற பாதிப்புக்கள் தொடர்பாகவும் மாற்றுத் தொழில்முறைகளை தெரிவு செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுப்பது தொடர்பாக ஆராயுமாறும் பிரதி உயர் ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரனிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அகதிஇந்தியாஇலங்கை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நினைவுகூரும் உரிமையை தடுப்பது தவறு – நாடாளுமன்றத்தில் தெரிவித்தது எதிர்கட்சி!

Next Post

இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியின் கூற்றுக்கு சீனா கடும் ஆட்சேபனை!

Related Posts

மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிட்டும்
இலங்கை

2026-02-02
மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது: புதிய இணையவழி கட்டண முறைமை ஆரம்பம்!

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்

ஆமை இறைச்சி, மீன்பிடிப் படகுடன் படகுடன் மன்னாரில் மூவர் கைது!

2026-02-02
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

திக்கோவிட்டவில் போதைப்பொருள் – அறிக்கையை கோருமாறு நீதிமன்றம் உத்தரவு

2026-02-02
போதைக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் தவிசாளரின் அதிரடி நடவடிக்கை.
கிழக்கு மாகாணம்

போதைக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் தவிசாளரின் அதிரடி நடவடிக்கை.

2026-02-02
Next Post
இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியின் கூற்றுக்கு சீனா கடும் ஆட்சேபனை!

இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியின் கூற்றுக்கு சீனா கடும் ஆட்சேபனை!

ஐ.நா எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது – உதவிப் பொதுச் செயலாளர்

ஐ.நா எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது - உதவிப் பொதுச் செயலாளர்

கடல்வழியாக வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த 20 பேர் கைது!

T-56 ரக துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் திருகோணமலையில் கைது!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் –  இந்தியாவுக்கு அழைப்பு

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் – இந்தியாவுக்கு அழைப்பு

0
மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிட்டும்

மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிட்டும்

0
மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது: புதிய இணையவழி கட்டண முறைமை ஆரம்பம்!

மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது: புதிய இணையவழி கட்டண முறைமை ஆரம்பம்!

0
இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.