ஒரே நாளில் பிரித்தானியாவில் கொரோனா தொற்று உறுதியான ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 186 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 18 இலட்சத்து 91 ஆயிரத்து 292 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 134 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மொத்த இறப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 857 ஆக உயர்ந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஒமிக்ரோன் தொற்று இங்கிலாந்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில் நேற்று 23 ஆயிரத்து 179 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கு ஒமிக்ரோன் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 625 ஆக உயர்ந்துள்ளது.



















