அயர்லாந்து அணியின் மூத்த வீரர் கெவின் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவில் நடக்கவிருக்கும் உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடருக்கு பின்னர் தான் ஓய்வு பெற விரும்புவதாக முன்னர் கூறியிருந்தார்.
இருப்பினும் 38 வயதான அவரை உலகக் கிண்ண போட்டிக்கு முன்னரே அணியில் இருந்து ஓரம்கட்ட தெரிவாளர்கள் முடிவு செய்த நிலையில் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிக்கு கெவின் ஓ பிரையன் அறிமுகமானார்.
இதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.
இது இன்னும் உலகக் கிண்ண போட்டியில் நிகழ்த்தப்பட்ட அதிவேக சதம் என்ற சாதனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.



















