நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அங்காடி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தோடம்பழத்தின் விலை 3075.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இதற்கு மேலாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ திராட்சை 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி கட்டுப்பாடுகள், இறக்குமதி வரி அதிகரிப்பு மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி போன்ற காரணங்களால் இவ்வாறு விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
















