68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57 ஆவது மாநாட்டில் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவை கோர, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துள்ளார்.
பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இந்த மாநாடு இலங்கையின் தலைமைத்துவத்தின் கீழ் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவிருந்த இந்த மாநாடு, நாட்டின் பொருளாதார மற்றும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ளது.
2016 ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விடுத்த கோரிக்கைக்கு அமைய நிதியமைச்சர் பதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படவுள்ளார்.















