எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி உயர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் நான்கு சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ஊதியம் இன்றி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸின் உரிய சம்பளத்தை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
கடத்தல் மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் டி.ஐ.ஜி வாஸ் குணவர்தனவை கைது செய்ய போலி சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் சுகத் மெண்டிஸ் கைது செய்யப்பட்டார்.
சுகத் மென்டிஸ் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றம் அறிவுறுத்தியபடி நிலுவைத் தொகை தனது தரப்பினருக்கு செலுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியதை அடுத்து அதனை பரிசீலனை செய்த பின்னர் நீதிபதிகள் இந்த அழைப்பாணையை விடுத்துள்ளனர்.