நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வில் இலங்கையின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சமர்பிக்கவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே இல்லாத நிலையில், இந்த அமர்வில் இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்குகிறார்.
இந்த அமர்வில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள அமைச்சர் முன்னதாக இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பல நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்ந்திப்பைத் தொடர்ந்து, பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உணவு மற்றும் விவசாய உதவிகளை பிரித்தானியா வழங்கியுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.