சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மற்றொரு அரிசி தொகுதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நவியோஸ் ஜாஸ்மின் கொள்கலன் கப்பலில் 500 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த அரிசியின் வருகையை அடுத்து, சீனா இலங்கைக்கு வழங்கிய மொத்த உதவித்தொகை 6,000 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.















