இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
22 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் லேகாகாதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம், அரசியல் செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய உயர் பதவிகளை இரட்டை பிரஜைகள் வகிக்க இடமளிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.
இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் இலங்கைப் பிரஜைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுக்க அனுமதிப்பது பிரச்சினைக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.