• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இன,மத அடையாளங்களுடன் செயற்படும் கட்சிகளை இல்லாமல்செய்யவேண்டும் – நிமல் ஜி புஞ்சிஹேவா

இன,மத அடையாளங்களுடன் செயற்படும் கட்சிகளை இல்லாமல்செய்யவேண்டும் – நிமல் ஜி புஞ்சிஹேவா

shagan by shagan
2022/11/10
in இலங்கை
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இன,மத அடையாளங்களுடன் செயற்படும் கட்சிகளை எதிர்காலத்தில் இல்லாமல்செய்யவேண்டிய தேவையுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்தார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்ட உத்தேச தேர்தல் சட்ட மறு சீரமைப்பு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவும் மக்கள் மயப்படுத்துவதற்காகவும் தேர்தல் ஆணைக்குழுவினால் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்ட.
மட்டக்களப்பு,நாவற்குடாவில் உள்ள தனியார் விடுதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டலின் கீழ் தேர்தல் முறைகளுக்கான சர்வதேச ஒன்றியம்,ஜஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம் என்பன இணைந்து இந்த கலந்துரையாடலை முன்னெடுத்தன.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க,தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.இதனை அமுல்படுத்துவதற்கு தேவையான செயல்முறைகள் மற்றும் மக்கள் மத்தியில் இது தொடர்பில் உள்ள கருத்துகள் இதன்போது பெறப்பட்டன.

இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பல்கலைக்கழக மாணவர்கள்,உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள்,கல்விப்புலத்தோர்,உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு முன்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்ட உத்தேச தேர்தல் சட்ட மறு சீரமைப்பு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான முன்மொழிவுகள் குறித்து பல்வேறுதரப்பினரிடமும்கருத்துகள் பெறப்பட்டன.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளடக்கப்படாத தேர்தல் ஒன்று நியாயமான தேர்தலாக உள்ளடக்கப்படமுடியாது.முறைப்படுத்தல் செயற்பாடுகள் நியாயமான ரீதியில் முன்னெடுக்கப்படவேண்டும்.தேர்தல்கள் மூலம் பெண்கள்,இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் உள்ளடக்கப்படவேண்டும்.

தேர்தல் முறைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் சிறந்த அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும்.அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் சட்டத்தில் செயற்படுத்தப்படவேண்டும்.ஒரு அரசியலில் பிரவேசிக்கும் உறுப்பினரின் சொத்துவிபரங்களை பொதுமக்கள் அறியவேண்டும்,ஒருவர் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவாராயின் அவரது பதவி பறிக்கப்படும் வகையில் ஏற்பாடுகள் அமையவேண்டும்.

தேர்தல் குற்றங்களை விசாரணை செய்யும் வகையில் தேர்தல் நியாயசபையொன்று உருவாக்கப்படவேண்டும்.அதன்மூலம் எதிர்காலத்தில் நீதியான நியாயமான தேர்தல் ஒன்று நடாத்துவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தமுடியும்.

இனமத என்ற அடிப்படையில் 1933ஆம்ஆண்டு தொடக்கம் இனரீதியான கட்சிகள் தோற்றம்பெற்றன.இவ்வாறான கட்சிகள் மூலம் பிரித்தாளும் நிலைமையினை இல்லாமல்செய்யவேண்டும்.இவ்வாறான கட்சிகளுக்கு எதிராகவும் சில தீர்மானங்களை எடுக்கவேண்டிய நிலையுள்ளது.

மாகாணசபை தேர்தல்கள் நடைபெற்று நீண்டகாலம் சென்றுள்ளது.இன்று மாகாணசபைகள் உள்ளதா என்னும் நிலை காணப்படுகின்றது.மக்கள் சபைகளை வேறு நபர்கள் ஆட்சிசெய்வதற்கு அனுமதிக்கமுடியாது.நாங்கள் சில விடயங்களை செய்யவேண்டும்.இல்லாது போனால் எமது எதிர்கால சமூகத்திற்கு நாங்கள் பொறுப்புக்கூறவேண்டிய நிலையேற்படும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுற்றுலா வீசா மூலம் செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்!

Next Post

கராப்பிட்டி புற்றுநோய் பிரிவில் திடீர் தீப்பரவல்

Related Posts

2026ல் மகளிருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – த.வெ.க தலைவர் விஜய்
இந்தியா

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – விஜய்!

2026-05-18
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

2026-05-18
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!
இலங்கை

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

2026-05-18
மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
இலங்கை

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

2026-05-18
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

இரவு வேளைகளில் மோட்டார்சைக்கிள்களை கீழே விழா செய்து கொள்ளையடித்தவர்கள் கைது!

2026-05-18
மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!
இலங்கை

மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

2026-05-18
Next Post
கராப்பிட்டி புற்றுநோய் பிரிவில்  திடீர் தீப்பரவல்

கராப்பிட்டி புற்றுநோய் பிரிவில் திடீர் தீப்பரவல்

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட  மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு!

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வரவு செலவுத் திட்ட அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலம் குறித்து ஆராய்வு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
2026ல் மகளிருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – த.வெ.க தலைவர் விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – விஜய்!

0

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

0
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

0
மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரவு வேளைகளில் மோட்டார்சைக்கிள்களை கீழே விழா செய்து கொள்ளையடித்தவர்கள் கைது!

0
2026ல் மகளிருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – த.வெ.க தலைவர் விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – விஜய்!

2026-05-18

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

2026-05-18
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

2026-05-18
மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

2026-05-18
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரவு வேளைகளில் மோட்டார்சைக்கிள்களை கீழே விழா செய்து கொள்ளையடித்தவர்கள் கைது!

2026-05-18

Recent News

2026ல் மகளிருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – த.வெ.க தலைவர் விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – விஜய்!

2026-05-18

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

2026-05-18
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

2026-05-18
மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

2026-05-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.