கனேமுல்ல, பகுதியில் திட்டமிடப்பட்ட ஒரு கொலைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், ஒரு மயானத்திலிருந்து இத்துப்பாக்கி மீட்கப்பட்டது.
கொலை ஒன்றைச் செய்வதற்காகப் பயன்படுத்தும் நோக்கில், தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் இத்துப்பாக்கி அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.













