வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணியை காலவரையின்றி ஒத்திவைக்க அரச அச்சகம் தீர்மானித்துள்ளது.
தேர்தல் தினத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் மற்றும் அச்சிடுவதற்கான வசதிகள் இன்மை போன்றவற்றை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது.
பொலிஸ் பாதுகாப்பு இல்லாததாலும், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு பணம் செலுத்தாததாலும் கடந்த காலங்களில் இந்த நடவடிக்கைகள் தடைபட்டன.
தேவையான அனைத்து வசதிகளும் இருந்தால், 25 முதல் 30 நாட்களுக்குள் அனைத்து வாக்குச் சீட்டுகளையும் அச்சிட முடியும் என அரச அச்சகம் தெரிவித்துள்ளது.













