அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது அவுஸ்ரேலியா அணி முதல் இன்னிங்சிற்காக 5 விக்கெட்களை இழந்து 311 பெற்றுக்கொண்டுள்ளது.
அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிவரும் உஸ்மன் கவாஜா ஆட்டமிழக்காது 126 ஓட்டங்களையும் அலெக்ஸ் கரி 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக தனது முதல் இன்னிங்சிற்காக 8 விக்கெட்களை இழந்து 393 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

















