வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த 3 நாட்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் 54 பேரும், பீகாரில் 44 பேரும் என மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, வெப்ப அலை காரணமாக காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது.
அதற்கமைவாக இதுவரை 500 க்கும் வைத்தியசாலையில் பலரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.