2019ஆம் ஆண்டுக்கு முன், ஜம்மு காஷ்மீரில் உள்ள மாநிலப் பாடப்பிரிவுகள், பட்டியல் பழங்குடி மற்றும் பட்டியலிடப்பட்ட சாதி வகை மற்றும் வருமானச் சான்றிதழ்கள் அல்லது நில ஆவணங்களின் நகல்களைப் பெற வாரக்கணக்கில் அலுவலகங்களைச் சுற்றி வர வேண்டியிருந்தது. இது தவிர, மக்கள் இலஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது.
ஆகஸ்ட் 5, 2019க்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்தில் பல நிர்வாக சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன, இது சாமானியர்களுக்கு பெரிதும் பயனளிக்கிறது.
ஊழலற்ற யூனியன் பிரதேசத்தை உருவாக்க, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்த தகவல் தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது, இதன் மூலம் 675 சேவைகள் இணைவழியில் வழங்கப்படுகின்றன.
வருமானச் சான்றிதழ்கள், குணச் சான்றிதழ்கள், பிற வகைச் சான்றிதழ்கள், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், குடியுரிமை சான்றிதழ்கள், கடவுச்சீட்டு, ஆகியவை இணையவழியில் கிடைக்கின்றன.
அதாவது, இந்த சேவைகளுக்கு ஒருவர் அரசு அலுவலகங்களுக்குச் செல்லவோ, யாரையும் பார்க்கவோ தேவையில்லை. இணையவழியில் தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து வீட்டில் இருந்தே விண்ணப்பிக்க முடியும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.
2019 க்கு முன்பு எந்த அரச சேவைகளும் இணையவழியில் இல்லை, இப்போது இரண்டு ஆண்டுகளுக்குள் இணையவழியிலான சேவைகளின் எண்ணிக்கை 675 ஆக அதிகரித்துள்ளது. இணையவழி திட்டங்களின் எண்ணிக்கையில் யூனியன் பிரதேசம் அபரிமிதமான முன்னேற்றம் அடைந்துள்ளது.















