நோபாளத்திலிருந்து கடந்த மூன்று மாதங்களில், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், விசாவைக் காலம் கடந்து தங்கியதற்காகவும் ஐம்பத்தைந்து வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சீனப் பிரஜைகள் அவதுகளில் 21 நபர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நாடுகடத்தப்பட்டவர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குகின்றனர்.
அதில் அமெரிக்காவைச் சேர்ந் 7பேர், ஏமன் நாட்டைச் சேர்ந்த 4 பேர், இங்கிலாந்தைச் சேர்ந்த 3 பேர், தென் கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, கேமரூன், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா இருவர் வீசா மீறல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டவர்களில் அடங்குவர்.
மேலும், இதே காலப்பகுதியில் பூட்டான், கானா, ஈரான், இத்தாலி, போர்ச்சுகல், பிரான்ஸ், சூடான், கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்தும் தலா ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.