காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவிற்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில்; தமிழ்நாட்டிற்கு எதிர்வரும் 15 நாட்களுக்குள் ஐயாயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையகம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, காவிரி விவகாரம் தொடர்பில் தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

















