உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து அரச ஊழியர்களும் வேட்புமனுவைக் கொடுப்பதற்கு முன்னர் அவர்கள் இருந்த அலுவலகங்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, தேர்தலுக்கு வேட்பு மனுக்களை சமர்ப்பித்த அரசு ஊழியர்களுக்கு நீதி வழங்க தாம் முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.














