பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் 7 வருடங்களாக தமிழ் மக்களின் மனங்களில் இடம்பிடித்த ஆதவன் வானொலி நேற்று முதல் இலங்கையிலும் கால்பதித்துள்ளது.
தொழினுட்பத்தின் அசுர வேகத்தின் காரணமாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, வலைத்தளங்கள் என படிப்படியாக வேறொரு பரிணாம வளர்ச்சியை நோக்கி தகவல் பரிமாற்றம் பயணம் செய்கின்றது.
ஆன்று முதல் இன்று வரை செவிகளுக்கு விருந்துகொடுத்து செய்திகளை எடுத்துக்கூற மற்றும் தகவல்களைப் பரிமாற்ற உருவாக்கப்பட்ட செவிப்புல சாதனம் வானொலி ஆகும்.
இந்நிலையில் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவையும் தாண்டி இலங்கையின் தலைநகர் கொழும்பில் 95.3 எனும் அலைவரிசையில் ஆதவன் வானொலியை கேட்டு மகிழலாம்.














