19 வயதிற்கு உட்பட ஆடவருக்கான உலகக் கிண்ண தொடரில் சிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இலங்கை இளையோர் அணி 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக திநுர 60 ஓட்டங்களை தமிழ் வீரரான சாருஜன் சண்முகநாதன் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
தொடந்து 205 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாவே இளையோர் அணி 21.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் மத்தேயு ஷொங்கன் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக மல்ஷா தருபதி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
19 வயதிற்கு உட்பட ஆடவருக்கான உலகக் கிண்ண தொடரில் முதலாவது போட்டியில் வெற்றியை பதிவு செய்து குழு சி பிரிவில் 2 புள்ளிகளோடு இலங்கை இளையோர் அணி முதலிடத்தில் உள்ளது.



















