இலங்கை மத்திய வங்கியானது (CBSL) நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை நேற்று (26) நடைபெற்ற கூட்டத்தில் கொள்கை வீதத்தை 8% ஆக பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை இன்று (27) முதல் நடைமுறைக்கு வரும் இரட்டைக் கொள்கை வட்டி வீத முறைக்குப் பதிலாக ஒற்றைக் கொள்கை வட்டி வீத முறையை நடைமுறைப்படுத்தவும் இதன்போது தீர்மானித்து.
மத்திய வங்கியால் செயல்படுத்தப்படும் நெகிழ்வான பணவீக்க இலக்கு கட்டமைப்பில் இது மற்றொரு முக்கியமான முன்னேற்றமாகும்.













