முல்லைத்தீவு மாவட்டதினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதுவரை காலமும் பொது மக்களினால் எடுக்கமுடியாமல் இழுபறி நிலையில் இருந்த ஆவணங்களை இலகு படுத்தி வழங்குவது தொடர்பான நடமாடும் சேவையில் ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ,கரைதுறைபற்று, துணுக்காய், மாந்தை கிழக்கு,வெலிஓயா ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த பொது மக்களுக்கு காணி,திருமண சான்றுகள்,இறப்பு பிறப்பு, சாரதி அனுமப்திபத்திரம்,பொலிஸ் சான்றுதள், ஆகிய நடமாடும் சேவைகள் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.














