தெற்கு ஈரானின் பன்டார் அப்பாஸில்(Bandar Abbas) உள்ள ஷாஹீன் ராஜீ துறைமுகத்தில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்துள்ளது.
பாரசீக வளைகுடாவில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள இந்த துறைமுகம் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும், 8 கோடி தொன் அளவுக்கு பொருட்கள் கையாளப்படுகின்றன.
இந்நிலையில் குறித்த துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் இருந்த மர்மப் பொருள் ஒன்று திடீரெ வெடித்துச் சிதறியதில் பாரிய வெடி விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் 1000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.
இத் தீ விபத்து மற்றும் அதை தொடர்ந்த வெடி விபத்துக்கு என்ன காரணம் என்பது, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், ஏவுகணைகளுக்கான எரிபொருட்கள் தீப்பிடித்து, விபத்து நடந்திருக்க வேண்டும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை விபத்துக்கான காரணத்தை ஈரான் அரசு மூடி மறைத்து வருவதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















