இலங்கையில் 57 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக நடைபெறவுள்ள சர்வதேச குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியான ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ள ஆசிய குத்துச்சண்டை கூட்டுசம்மேளனத் தலைவர் அஸிஸ் கொஸாம்பிடோவ், இன்று இலங்கை வந்தடைந்தார்.
இலங்கை குத்துச்சண்டை சங்கத் தலைவர் ஷானக்க அனுருத்த உட்பட சங்க அதிகாரிகள் அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இப் போட்டி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நாளை (12) முதல் எதிர்வரும் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன் 29 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீர, வீராங்கனைகள் இதில் பங்குபற்றவுள்ளனர்.
இதேவேளை, இலங்கையிலிருந்து 33 வீர, வீராங்கனைகளும் இதில் பங்குபற்றவுள்ளனர்.
இப் போட்டிக்கான ஆரம்ப வைபவம் சுகததாச உள்ளக அரங்கில் நாளை(12) முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.














