ஹைதராபாத்தின் அடையாளச் சின்னமான சார்மினார் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று காலை (18) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்து 11 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்ததுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
குறித்த விபத்து சம்பவத்திற்கு கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், நிவாரணம் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சதேகிப்பதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.














