5ம் தலைமுறை போர் விமானங்களை தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும், வலுவான உள்நாட்டு விண்வெளி தொழில்துறையை வளர்க்கும் விதமாக பாதுகாப்புத்துறையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும் 5ம் தலைமுறைக்கான போர் விமானங்களை உருவாக்கும் இந்த திட்டத்தில், தனியாரும் பங்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், சுயாதீனமாகவோ அல்லது கூட்டு முயற்சியாகவோ இந்த திட்டத்திற்கான ஏலத்தில் பங்கேற்கலாம்.
அரசின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டு இயங்கும் ஒரு இந்திய நிறுவனமாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 5ம் தலைமுறை போர் விமானம், 2035ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தெரிவித்துள்ளது.
‘இந்தத் திட்டத்திற்கு 2024ம் ஆண்டு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















