உக்ரைன் – ரஷ்யா இடையே மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் இருந்தபோதிலும் ரஷ்யாவும் உக்ரைனும் மேலும் பல போர்க் கைதிகளை பரிமாறிக்கொண்டுள்ளன.
மாஸ்கோ மற்றும் கியேவில் உள்ள அதிகாரிகள் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தினர்.
இருப்பினும் விடுவிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையை தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட வில்லை.
இதேவேளை, ஆயுதப்படைகள், தேசிய காவலர் மற்றும் மாநில எல்லைக் காவல்படையின் வீரர்கள் வீடு திரும்புவதாக உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அவரது X பதிவில் தெரிவித்துள்ளார்.
அவர்களில் பெரும்பாலானோர் 2022 முதல் சிறைபிடிக்கப்பட்டவர்கள் எனவும் ஒவ்வொரு நபரையும் கண்டுபிடிக்க, ஒவ்வொரு பெயரிலும் உள்ள தகவல்களைச் சரிபார்க்க நாங்கள் எல்லாவற்றையும் செய்து வருகிறோம், எனவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், மற்றொரு ரஷ்ய வீரர்கள் குழு உக்ரைனில் இருந்து திரும்பியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















