மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ், முன்மொழியப்பட்ட சட்டத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பல பிரிவுகள் அரசியலமைப்பை மீறுவதாகவும், நாடாளுமன்றின் விசேட பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பின் ஒப்புதலை மின்சார திருத்த சட்டமூலம் பெற வேண்டுமென நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.
எனினும், உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி தொடர்புடைய பிரிவுகள் திருத்தப்பட்டால் இந்த அரசியலமைப்பு முரண்பாடுகள் ஏற்படாது என்றும் பிரதி சபாநாயகர் தெளிவுபடுத்தினார்.
இன்றைய சிறப்பு நாடாளுமன்ற அமர்வின் போதே பிரதி சபாநாயகர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.















