இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 45பேர் காயமடைந்துள்ளனர்.
எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாயு கசிவு ஏற்ப்பட்டதால் பயங்கர சத்தத்துடன் நிலையம் வெடித்து சிதறியது.
தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் இச்சம்பவத்தில் 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை மீட்பு படையினர் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு கொண்டு சென்ருள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



















