நீர்கொழும்பு – ஏத்துகல கடற்கரையில் கடலில் குளிக்கச் சென்ற நான்கு பேர் பலத்த நீர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (06) மாலை நடந்ததாகவும், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளான பொலிஸ் பரிசோதகர் அனுராதா, கான்ஸ்டபிள் (99177) லக்ஷன், கான்ஸ்டபிள் (105320) விஜேசிங்க ஆகியோர் பலத்த நீரோட்டத்தில் சிக்கிய நபர்களை மீட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் 20, 21, 22 மற்றும் 34 வயதுடைய வெயாங்கொடை, பூண்டலுஓயா மற்றும் நமுனுகுல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்.














