திருகோணமலை கந்தளாய் குளத்திற்கு நேற்று முன்தினம் மீனவர்கள் மூவர் மீன் பிடிக்கச் சென்றிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்தார்.
இவ்வாறு காணாமல் போயிருந்த மீனவரின் சடலம் இன்று கரையுதுங்கியுள்ளது.
இதேவேளை, காணாமல் போயிருந்த மீனவரின் உறவினர்கள் அக்போபுர பொலிஸ் நிலையத்தில் முன்னதாக முறைப்பாடு செய்திருந்தனர்.
மீனவதொழிலில் ஈடுபட்டுவரும் கந்தளாய் பலுகஸ் கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான மது சஞ்ஞய குமார் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.
இவர், நண்பர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து தனியாகவே இருந்துள்ளார் பின்னர், மற்ற இருவர் கரைக்கு வந்து விட்ட நிலையில், மதுசஞ்சய திரும்பவில்லை.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஏனைய மீனவர்கள் இருவர் அக்போபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் காணாமல் போயிருந்த மீனவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் இன்று அதிகாலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க சென்றிருந்த மீனவர்கள் குறித்த சடலம் கரையொதுங்கியிருந்ததை அவதானித்ததனை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து அக்போபுர பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தினை மீட்டுள்ளனர்.















