இலங்கை மற்றும் ஹங்கேரி இடையிலான உயர்கல்வி துறையின் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், Stipendium Hungaricum புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொள்ளப்படவுள்ளது.
அறிவை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஹங்கேரி வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் இலங்கை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் இடையே 2025-2027 காலப்பகுதிக்கான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2022-2024 காலப்பகுதியில் நடைமுறையில் இருந்த முந்தைய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஆண்டுதோறும் 20 புலமைப்பரிசில் வாய்ப்புகள் இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதில்,
-
08 முதலாவது பட்டப்படிப்பு (Undergraduate),
-
08 பட்டப்பின்படிப்பு (Postgraduate),
-
04 கலாநிதிப் பட்டப்படிப்பு (Doctoral)
வாய்ப்புகள் அடங்கும்.
இந்த புலமைப்பரிசில்கள் விஞ்ஞானம், தொழிநுட்பம், பொறியியல், கணிதம், மருத்துவம், சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளில் வழங்கப்படும்.
இதற்கமைய, ஹங்கேரி வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சுடன் புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக உள்ள கௌரவ பிரதமர் அவர்களின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.















