கடந்த மே மாதத்திலிருந்து காசாவில் உணவுப் பொருட்களைப் பெற முயன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்துள்ளது.
மே மாத இறுதியில் இருந்து உணவு பெற முயன்றபோது கொல்லப்பட்ட 1,054 பேரில், 766 பேர் காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்தும் தளங்களுக்குச் சென்றபோது கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
GHF ஒரு சர்ச்சைக்குரிய அமைப்பாக பார்க்கப்படுகிறது.
டெலாவேரில் பதிவுசெய்யப்பட்டு இஸ்ரேலால் ஆதரிக்கப்படும் இது, பெப்ரவரியில் காசாவில் உள்ள நான்கு மையங்களிலிருந்து உதவிகளை விநியோகிக்க நிறுவப்பட்டது.
இதனிடையே, செவ்வாயன்று 80 சிறுவர்கள் உட்பட 101 பேர் பட்டினியால் இறந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் கூறியது.














