கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டர்பிள் தெரு பகுதியில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையில் 120 மி.கி. ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் ஹெய்யன்துடுவ பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனி வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















