2025ம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை இன்று நிறைவடைவதுடன் மூன்றாவது தவணை எதிர் வரும் 18ம் திகதி திங்கட் கிழமையன்று ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாவது தவணை எதிர்வரும் 19ம் திகதி செவ்வாய்க் கிழமை நிறைவடைவதுடன், மூன்றாம் தவணை எதிர்வரும் 25ம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














