போர்த்துக்கலில் தீயை அணைக்கச் சென்ற வாகனமொன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சாவோ பிரான்சிஸ்கோ டி அசிஸ் கிராமத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு படையினர் சென்ற போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அவசரநிலை மற்றும் சிவில் பாதுகாப்பு ஆணைக்குழுவின் (ANEPC) கூற்றுப்படி, ஒன்பது வாகனங்கள் மற்றும் ஒரு விமானத்தின் உதவியுடன் விபத்து நடந்த இடத்திற்கு 26 ஒபரேட்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















