லண்டன் நகரின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு இளைஞர் மையத்தில், இளம் தோள்களில் சுமந்து செல்லப்படும் வெள்ளை நிற சவப்பெட்டி ஒன்றைக் காண முடிகிறது. அந்த காட்சி ஒரு இறுதிச்சடங்குப் போல தோன்றினாலும், அது உண்மையில் வேறு ஒரு சமூக செய்தியை வெளிப்படுத்தும் கலை நிகழ்வாகும் என சமூக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன
அத்துடன் அந்த சவப்பெட்டியின் உள்ளே ஒரு பெரிய சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. அது இரத்தக் கறைகள் படிந்த கத்தியின் வடிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அந்தக் கத்தியின் மேல் லண்டன் நகரின் skyline வடிவம் செதுக்கப்பட்டுள்ளமை காட்சியை மேலும் அதிர்ச்சியூட்டும்வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இந்த கலைப்பணியின் உருவாக்கம், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் கத்திக்குற்றங்களைப் குறித்த விடயத்தை நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டதுடன், இதனை சுற்றி பலரும் திரண்டுள்ளதாகவும் அறிய முடிகிறது
சிலர் அந்த காட்சியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க, சிலரின் கண்களில் கண்ணீர் பெருகியதாக குறிப்பிடப்படுகிறது அந்த உணர்ச்சிப்பூர்வமான தருணம், கத்திக்குற்றங்களால் உயிரிழக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளத என்பது குறிப்பிடத்தக்கது
இந்த கலைத்திட்டம் “Re-claim என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பல்துறை கலைஞரான யூஜின் அன்கோமா (Eugene Ankomah) உருவாக்கிய ஒரு சமூக விழிப்புணர்வு முயற்சியாகும்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ‘தெருக்களில் இழக்கப்பட்ட’ இளைஞர்களின் வாழ்க்கையை சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாகும்.
இன்றைய சூழலில், இளைஞர்கள் கத்திக்குற்றங்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பல சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர். இதைத் தடுக்கும் நோக்கில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாக இருப்பதாகவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த கலை நிகழ்வின் மூலம், கத்திக்குற்றங்களால் ஏற்படும் துயரங்களையும் அதன் சமூக விளைவுகளையும் மக்கள் நேரடியாக உணர வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் நோக்கமாக உள்ளது டன், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த Re-claim” கலைத்திட்டம் முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.














