வெல்லம்பிட்டி – கித்தம்பஹுவ பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
உணவகத்தில் தங்கியிருந்த ஒருவரை குறிவைத்து, அடையாளம் தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறு இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.















