இப்பருவகாலத்திற்கான லாலிகா கால்பந்தாட்ட தொடரில் செவியா மற்றும் கெடபே அணிகளுக்கிடையிலான போட்டியில் 2-1 என்ற ரீதியில் வெற்றிப்பெற்று கெடபே அணி புள்ளிப்பட்டியலில் 4ஆமிடத்திற்கு முன்னேறி அசத்தியது.
இப் பருவகாலத்திற்கான லாலிகா தொடரும் தற்போது ஆரம்மாகியுள்ளது.
96 ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்ற இக்கழக மட்ட போட்டிகள் ஸ்பெய்ன் கழக அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெற்று வருகின்றது.
62 கழகங்கள் பலப்பரீட்சை நடாத்தும் குறித்த தொடரில் நேற்றைய தினம்(26) பலம்வாய்ந்த இரு அணிகளான செவியா மற்றும் கெடபே அணிகள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன.
போட்டியின் 15வது நிமிடத்தில் அட்ரியன் லிசோ கெடபே அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதனால் அவ்வணி 1-0 என முன்னிலைப்பெற்ற நிலையில் முதல் பாதியில் கடைசி நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பினால் செவியா அணி 1-1 என போட்டியை சமப்படுத்தி அசத்தினார்.
கெடபே அணியின் ஜீவான் இல்கெல்சியாஸ் அடித்த பந்து ஓன் கோல் அடிப்படையில் அவ்வணிக்கு கோலாக மாறிய பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் 51வது நிமிடத்தில் மீண்டும் அட்ரியன் லிசோ கெடபே அணியின் இரண்டாவது கோலினை பதிவு செய்து அசத்தினார்.
போட்டியை சமப்படுத்த செவியா அணி எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைய 2-1 என கெடபே அணி வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் இரண்டு வெற்றிகளை தொடர்ச்சியாக பதிவு செய்து 4வது இடத்திற்கு முன்னேறியது.



















