தங்காலை, மஹாவெல பகுதியில் நேற்று (27) மாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் மொத்தம் பதினொரு பேர் காயமடைந்துள்ளனர்.
மாத்தறையிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்தும், தங்காலையிலிருந்து திக்வெல்ல நோக்கிச் சென்ற மற்றொரு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நகுலுகமுவ மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














