எல்லா-வெல்லவாய பிரதான வீதியில் நேற்றிரவு (04) ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு பதிலளிக்கும் விதமாக இலங்கை விமானப் படை தமது ஹெலிகொப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
அதன்படி, தியதலாவை விமானப்படை முகாமில் MI-17 ஹெலிபொப்டர் ஒன்றும், வீரவில விமானப்படை முகாமில்பெல் 412 ஹெலிகொப்டர் ஒன்றும் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.
இந்த விமானப்படை விமானங்கள் நோயாளிகளை கொழும்புக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல அல்லது தேவையான மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ தயாராக உள்ளன.
நேற்று (04) இரவு 9 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்லாவிலிருந்து வெல்லவாயா நோக்கிச் சென்ற பேருந்து, எதிரே வந்த ஜீப் வாகனத்துடன் மோதியதனால் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், குறித்த ஜூப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.















