இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் (காணி) வீரவன்ஷ பெரேரா ஆகிய இருவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு இன்று கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த நபர்கள் தலா 2.5 மில்லியன் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

















