கொலம்பியாவின் கோகாவில், சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் 7 பேர் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை முதல் இந்தக் குழு சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தரை மட்டத்திலிருந்து 28 மீட்டர் ஆழத்தில் அவர்கள் சிக்கியுள்ளனர்.
சிக்குண்டவர்களை மீட்பதற்கு அதிகாரிகளுக்கு போதுமான ஆதரவு கிடைக்காமையினால் உள்ளூர்வாசிகளும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒழுங்கற்ற சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் நிறைந்துள்ள இந்தக் கோகா பகுதியில் இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து ஏற்படுவதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.















