கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் கழிப்பறை குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது குப்பைத் தொட்டியில் குறித்த தோட்டகள் இருப்பதை துப்புரவு ஊழியர்கள் கவனித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட குறித்த தோட்டகள், பரிசோதனையில் 9MM வகைகள் எனவும் அவை செயல்படுத்தப்படாத தோட்டாக்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளன.
இதேவேளை, யாரோ ஒருவர் கழிப்பறை குப்பைத் தொட்டியில் தோட்டகளை வைத்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.















