இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் வாங்கிய சம்பவம் தொடர்பான சதீஷ் கமகேவின் வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதம நீதவான் சந்தேகநபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.















