துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை முயற்சி குற்றத்திற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2025.07.24 அன்று தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையை கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.
அதன்படி, சந்தேக நபர் நேற்று (22) தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்வத்த சாலைப் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 35 வயதுடைய தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.














